Gold Price Drop | ஒரே நாளில் கிடுகிடுவென சரிந்து தலைகீழாக மாறிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்றத்தில் இருந்து வந்த தங்கம் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், தீபாவளிக்கு பிறகு கணிசமாக குறைந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று (அக்டோபர் 27) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,450க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ. 91,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Gold Price Drop
அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.125 குறைந்து ஒரு கிராம் ரூ.9,450க்கும், சவரனுக்கு ரூ. 1,000 குறைந்து ஒரு சவரன் ரூ.75,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
