பைசனின் பிரம்மாண்ட வெற்றி.. தனுஷ் படத்துக்காக மாரி செல்வராஜ் போட்டுள்ள திட்டம்.. மிரட்டலான அப்டேட்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பினை பெற்று கொண்டிருக்கிறது. துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படம் பலத்தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அத்துடன் வசூலிலும் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாரி செல்வராஜ் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் படமொன்றை இயக்கவுள்ளார். இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் மாரி செல்வராஜ் ‘பைசன்’ ரிலீசுக்கு பின்பாக நேர்காணல்களில் பேசி வருகிறார். அந்த வகையில் தற்போது அளித்து பேட்டி ஒன்றில் தனது அடுத்த படம் பற்றி கூறும் போது, “இதுவரை நான் இயக்கிய படங்களை விட தனுஷின் படம் பெரியதாக இருக்கும். பல நாடுகளில் இப்படத்துக்கான ஷுட்டிங் நடைபெறும். படத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. இதுவொரு சரித்திர கதையாக இருக்கும்” என்று தனுஷ் 56 குறித்து பேசியுள்ளார் மாரி செல்வராஜ்.

பைசனின் பிரம்மாண்ட வெற்றி.. தனுஷ் படத்துக்காக மாரி செல்வராஜ் போட்டுள்ள திட்டம்.. மிரட்டலான அப்டேட்
அவர் பகிர்ந்துள்ள இந்த தகவல் இணையத்தில் ரசிகர்கள் இடையில் கவனம் ஈர்த்து வருகிறது. தற்போது வரை தனது இயக்கத்தில் வெளியான படங்களின் காட்சிகளை பெரும்பாலும் தமிழ்நாட்டுக்குள்ளே படமாக்கி இருக்கிறார். ஆனால் தனுஷ் படத்தின் ஷுட்டிங்கை பல நாடுகளில் நடத்தவுள்ளதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளது பெரும் எதிர்பார்ப்புனை கிளப்பியுள்ளது
